ஸ்காட்லாந்தில் ரயிலில் அந்நியரை தாக்கிய நபருக்கு 12 ஆண்டுகள் சிறை
ஸ்காட்லாந்தில் (Scotland) ரயிலில் பயணம் செய்த அந்நியரை உடைந்த கண்ணாடி போத்தலால் தாக்கிய நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி அன்று, கிளாஸ்கோ குயின் ஸ்ட்ரீட் (Glasgow Queen Street) நிலையத்திலிருந்து பெர்த் (Perth) செல்லும் ரயிலில் பயணித்த போது, 48 வயதான தாமஸ் கிரெய்க் (Thomas Craig) மது மற்றும் கோகைன் (Cocaine) போதையில் இருந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
அந்த நேரத்தில், அவர் க்ளென் லெனன் (Glen Lennon) என்பவரை பலமுறை குத்திய சம்பவம் சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவாகியுள்ளது.
23 வயதான க்ளென் லெனனுக்கு இதயத்திற்கு அருகே கடுமையான காயம் ஏற்பட்டது.
கிளாஸ்கோ உயர் நீதிமன்றத்தில் (High Court in Glasgow) வழக்கை விசாரித்த லார்ட் ஆர்தர்சன் (Lord Arthurson), இது லெனன் மற்றும் ஆரோன் நெல்சன் (Aaron Nelson) ஆகிய இருவருக்கும் எதிரான “மிகவும் வன்முறையான மற்றும் பயங்கரமான தாக்குதல்” என்றும், ரயிலில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்ததாகவும் கூறினார்.
கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில், அவர் கொலை முயற்சி மற்றும் கடுமையான தாக்குதல் குற்றங்களில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
சம்பவத்திற்கு முன்பு அவர் சுமார் ஆறு மணி நேரம் மது (Alcohol) அருந்தியதும், கோகைன் (Cocaine) பயன்படுத்தியதும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.





