கொழும்பில் துப்பாக்கிதாரிகள் இருவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

கொட்டாஞ்சேனை – கொட்டாஞ்சேனை வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸ் விசாரணையின் போது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளனர்.
இதன் போது குறித்த சந்தேகநபர்கள் இருவரின் மீதும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
(Visited 5 times, 5 visits today)