செய்தி விளையாட்டு

பார்டர் கவாஸ்கர் தொடர்- இந்திய அணி பவுலர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் செயல்பாடு?

பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி காளை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி நான்குக்கு பூஜ்ஜியம் அல்லது 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

இந்த சூழலில் இந்திய அணியில் தற்போது இடம்பெற்றிருக்கும் பவுலர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

தற்போது ஆஸ்திரேலிய அணியின் டாப் 3 வீரர்கள் என்றால் அது உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபசேன் மற்றும் ஸ்மித் தான்.

இதில் ஒவ்வொருவரும் இந்திய பவுலர்களுக்கு எதிராக எப்படி செயல்பட்டு இருக்கிறார்கள் என்று தற்போது பார்க்கலாம். பும்ராவுக்கு எதிராக உஸ்மான் கவாஜா ஏழு இன்னிங்ஸில் 43 ரன்கள் எடுத்திருக்கிறார்.

ஒருமுறை கூட ஆட்டமிழந்தது கிடையாது. மார்னஸ் லாபஸ்சேன் ஆறு இன்னிங்ஸில் பும்ராவுக்கு எதிராக 49 ரன்கள் சேர்த்திருக்கிறார். அவரும் ஒருமுறை கூட ஆட்டம் இழந்தது கிடையாது.

ஸ்மித்தை பொறுத்தவரை ஐந்து இன்னிங்ஸில் 52 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால் அவர் பும்ராவிடம் ஒரு முறை ஆட்டம் இழந்திருக்கிறார்.

முகமது சிராஜை பொறுத்தவரை கவாஜாவை ஐந்து இன்னிங்ஸில் பந்துவீசி இரண்டு முறை அவருடைய விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.

10 முறை சிராஜை எதிர்கொண்டு இரண்டு முறை ஆட்டம் இழந்திருக்கிறார். ஸ்மித் 9 முறை சிராஜை எதிர்கொண்டு ஒருமுறை ஆட்டம் இழந்திருக்கிறார்.

இருப்பதிலேயே அஸ்வின் தான் இந்த மூன்று வீரர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். கவாஜா அஸ்வினை எட்டு முறை எதிர்கொண்டு 99 ரன்கள் சேர்த்திருக்கிறார்.

இதில் நான்கு முறை அவர் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்திருக்கிறார். மார்னஸ் லாபஸ்சேன் 14 இன்னிங்ஸ் எதிர் கொண்டு அஸ்வின் எதிராக 190 ரன்கள் சேர்த்து மூன்று முறை ஆட்டம் இழந்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்மித் 25 முறை அஸ்வினை எதிர்கொண்டு மொத்தமாக 434 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால் எட்டு முறை அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து இருக்கிறார்.

இதேபோன்று ஜடேஜாவை எதிர்கொண்டுள்ள உஸ்மான் கவாஜா, ஏழு இன்னிங்ஸில் 139 ரன்கள் எடுத்து நான்கு முறை ஆட்டம் இழந்திருக்கிறார்.

மார்னஸ் லாபஸ்சேன், 12 இன்னிங்ஸில் ஜடேஜாவுக்கு எதிராக 99 ரன்கள் எடுத்து ஐந்து முறை ஆட்டம் இழந்திருக்கிறார்.

20 இன்னிங்ஸ் விளையாடி 270 ரன்கள் சேர்த்து எட்டு முறை ஆட்டம் இழந்து இருக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி