செய்தி

நாளை ஆரம்பமாகும் பார்டர் – கவாஸ்கர் தொடர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியானது உலகத்தின் அதிவேக ஆடுகளமான பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது.

இரு அணிகளுக்கும் மிக முக்கியமான தொடராக இந்த தொடர் அமைந்துள்ளது. இந்த தொடரை 4-0 என்கிற கணக்கில் இந்திய அணி வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்யியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

மறுமுனையில் ஆஸ்திரேலியா அணி கடந்த பத்து ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் தொடரில் வெற்றி பெறவில்லை.

இதனால் இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி நிச்சயம் வென்றாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ளது. இரு அணிகளும் தொடரை வென்றாக வேண்டும் என்கிற நெருக்கடியில் களமிறங்குவதால் நிச்சயம் இந்த தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்தியா:

ரோஹித் சர்மா (கேப்டன்) ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (WK), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி,ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி