செய்தி

அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட புத்தகம் – பாடசாலைகளில் இருந்து அகற்றம்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பாடசால வட்டாரத்தில் புத்தகங்களை தடை செய்யச் சொல்லும் புத்தகம் ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது.

அலென் கரெட்ஸ் எழுதிய அந்தச் சிறார் புத்தகம் Indian River county எனும் பகுதியில் இருக்கும் பாடசாலைகளில் இருந்து அகற்றப்படும்.

அந்தப் புத்தகம் 2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் இடம்பெறும் சிறுமி ஒரு புத்தகத்தை இரவல்பெற நூலகத்திற்குச் செல்கிறார்.

அப்போது நூலக அதிகாரி அந்தப் புத்தகம் நூலகத்திலிருந்து தடை செய்யப்பட்டதாகக் கூறஜியுள்ளார்.

அந்தப் புத்தகம் பிள்ளைகளுக்குப் பொருத்தமாக இருக்காது என்று கருதி பெற்றோர் அந்தப் புத்தகத்தைத் தடை செய்ய கூறியுள்ளனர். அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டிருப்பதாகப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும்.

அப்போது அந்தச் சிறுமி நூலகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் புத்தகங்களைச் சேகரித்து தம்முடைய சொந்த நூலகத்தை ரகசியமாக உருவாக்குகிறார். அதுவே Ban This Book புத்தகத்தின் கதைச் சுருக்கமாகும்.

அந்தப் புத்தகம் மாணவர்களிடம் எதிர்த்து நடக்கும் போக்கை உருவாக்குவதாகப் தலைமை அதிகாரிகள் கருதினர். எனவே அது தடைசெய்யப்பட்டது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி