இந்தியா

இந்தியாவில் மத வழிப்பாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு : பலர் காயம்!

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலத்தில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (29.10) காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த இடத்தில் சுமார் 03 வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வெடிவிபத்து ஏற்பட்ட போது, ​​தேவாலயத்தில் சுமார் 2,000 பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

உணவுப் பெட்டியில் மறைத்து வைத்து குண்டுகள் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், இது திட்டமிட்ட தாக்குதல் என்று  தகவல் வெளியாகியுள்ளதாகவும்  இந்திய ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

எவ்வாறாயினும், சந்தேகநபர் ஒருவர் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் மற்றுமொருவர் தாக்குதலை நடத்தியதாகக் கூறி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே