இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் விமானங்களுக்கும் ரயிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியாவில் ஒரே நாளில் மூன்று விமானங்களுக்கும் ஒரு ரயிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை – நியூயார்க் ஏர் இந்தியா விமானம் (ஏஐ119), மும்பை – ஜெட்டா (6இ1275) மற்றும் மும்பை – மஸ்கட் (6இ1275) இண்டிகோ விமானங்கள், மும்பை – ஹௌரா ரயில் ஆகிய சேவைகள் வெடிகுண்டு மிரட்டலால் பாதிக்கப்பட்டன.

திங்கட்கிழமை (அக்டோபர் 14) அதிகாலையில் மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வெடிகுண்டு மிரட்டலை அடுத்து புதுடெல்லிக்குத் திருப்பிவிடப்பட்டது.

டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் அவ்விமானம் தரையிறங்கியதும் அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

எக்ஸ் ஊடகம் வழியாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, விமானத்தை அதிகாரிகள் முழுமையாகச் சோதனையிட்டு வருகின்றனர்.

ஏர் இந்தியா நிறுவனமும் ஓர் அறிக்கை வாயிலாக இதனை உறுதிப்படுத்தியுள்ளது.இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இண்டிகோ விமானங்கள் தனித்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னிரவு 2 மணிக்குக் கிளம்பவிருந்த மஸ்கட் விமானம் காலை 9 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. அதேபோல, இரவு 2.05 மணிக்குக் கிளம்பவேண்டிய ஜெட்டா விமானம் இன்னும் புறப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, மும்பையிலிருந்து ஹௌரா நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ரயிலிலும் (எண் 12809) வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. அதனையடுத்து, அதிகாலை 4 மணியளவில் அந்த ரயில் மகாராஷ்டிராவின் ஜல்கான் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, முழுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகப்படும்படி எதுவும் சிக்காததால் பின்னர் அந்த ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

(Visited 37 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே