யுனைடெட் ஏர்லைன்ஸ் ( United Airlines) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
டல்லாஸிலிருந்து (Dallas) சிகாகோவுக்குச் (Chicago) பயணித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் (Louis International Airport) விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விமானம் மிசோரியில் (Missouri) உள்ள லம்பேர்ட் செயிண்ட் லூயிஸ் (Lambert St. Louis) சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது மனைவி கொண்டுவந்துள்ள பொதியில் வெடிக்கும் சாதனம் இருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
லம்பேர்ட் செயிண்ட் லூயிஸ் (Lambert St. Louis) சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் குறித்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், விமானம் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆபத்து இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.





