இந்தியா செய்தி

விமானங்களை தொடர்ந்து தாஜ்மஹாலுக்கும் வெடிகுண்டு மிரட்டல்?

தற்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த நிலையில், தாஜ் மஹாலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக உத்தரபிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து தாஜ் மஹால் நுழைவு வாயில் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், பொலிஸார் மோப்ப நாய் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மின்னஞ்சலில் போலியாக மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து இந்திய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி