சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் மின்னஜலுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன், மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





