பிரான்சில் இதுவரை 299 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்:கல்வி அமைச்சர்

பிரான்சில் இந்த புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 299 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மட்டும் 75 பாடசாலைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் இதுவரை பலரை கைது செய்துள்ளோம். அவர்களில் பலர் 11, 12 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள்!” என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல் விடுபவர்களுக்கு 3 வருட சிறையும், 50,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)