ஏர் இந்தியா நிறுவனத்தின் டொராண்டோ-டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டொராண்டோவிலிருந்து(Toronto) டெல்லிக்குச்(Delhi) சென்ற ஏர் இந்தியா(Air India) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் தேசிய தலைநகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
AI188 விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததற்கு பிறகு டெல்லி காவல்துறை அவசரமாக நடவடிக்கை மேற்கொண்டது.
“பாதுகாப்பு கருதி, பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கிவிட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக மும்பையில் இருந்து வாரணாசிக்கு(Varanasi) பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்(Air India Express) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வாரணாசி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
(Visited 3 times, 3 visits today)




