குண்டு வெடிப்பு சம்பவம் – காஷ்மீரை சுற்றிவளைத்த காவல்துறை அதிகாரிகள்!
இந்தியாவில் அண்மையில் இடம்பெற்ற கார்குண்டு வெடிப்பை தொடர்ந்து காஸ்மீரில் காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட இமயமலைப் பகுதி முழுவதும் நேற்று முன்தினம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி காஷ்மீரின் அவந்திபோரா (Awantipora), பந்திபோரா(Bandipora), காண்டர்பால் (Ganderbal), ஷோபியன் (Shopian) மற்றும் சோப்பூர் (Sopore) மாவட்டங்கள் உட்பட்ட பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டைக்கு அருகே இடம்பெற்ற இந்த தாக்குதலை புலனாய்வாளர்கள் பயங்கரவாத தாக்குதலாக வகைப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாக குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது.
(Visited 4 times, 4 visits today)




