நைஜீரியாவில் குண்டுவெடிப்பு – 05 பேர் பலி!
நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ (Borno) மாநிலத்தில் உள்ள ஒரு மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மாநிலத் தலைநகரான மைதுகுரியின் கம்போரு சந்தையில் மாலை தொழுகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் மேலும் 35 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலை நடத்தியதாக எந்தக் குழுவும் ஒப்புக் கொள்ளவில்லை.
வடகிழக்கு நைஜீரியாவில் பொதுமக்களுக்கு எதிராக அவ்வப்போது இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




