இஸ்ரேல் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடிப்பு – 9 வீரர்கள் காயம்
 
																																		தெற்கில் உள்ள இராணுவ தளத்தில் வெடிகுண்டுகள் வெடித்ததில் ஒன்பது இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று இராணுவம் அறிவித்தது.
“தெற்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளது. இந்த சம்பவம் விசாரணையில் உள்ளது” என்று குண்டுவெடிப்பு குறித்து ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது.
காயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெகேவ் பாலைவனத்தில் உள்ள தளத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 20 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
