இலங்கை

கொழும்பில் குண்டுத் தாக்குதல் திட்டம்! சஜித் விடுத்துள்ள கோரிக்கை

கொழும்பில் உள்ள 7 இடங்கள் மீது ஐ எஸ் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் இருப்பதாக அரசாங்கப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்றம், நாடு மற்றும் மக்களுக்கு இது குறித்த உண்மை தன்மையை சரியாக அறிவிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறைச்சாலையில் இருக்கும் ஐ எஸ் பயங்கரவாதிகளால் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாரதூரமானதோர் விடயம் என்பதனால், இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறும், ண்டும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது என்பதால் கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்று இந்த அபாயம் குறித்து ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நாட்டின் சட்டத்தினுள் இயன்ற உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!