உலகம் செய்தி

விண்வெளி வீரர்கள் இன்றி பூமியை வந்தடைந்த போயிங்கின் ஸ்டார்லைனர்

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி இ வில்மோர் இல்லாமல் போயிங்கின் ஸ்டார்லைனர் கேப்சூல் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பியுள்ளது.

போயிங் ஸ்டார்லைனர் காப்ஸ்யூல் நியூ மெக்சிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளித் துறைமுகத்தில் தரையிறங்கியது.

பாராசூட் மற்றும் ஏர்பேக்குகள் உதவியுடன் மெதுவான தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது.

திட்டமிட்டதை விட சுமார் 6 மணிநேரத்திற்கு முன்னதாகவே ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது.

பல வருட தாமதங்களுக்குப் பிறகு, ஸ்டார்லைனர் ஜூன் மாதம் விண்வெளிக்குச் சென்றது. சுமார் ஒரு வார காலத்துக்குப் பிறகு சுற்றுப்பாதை ஆய்வகத்திற்குச் சென்றது. ஆனால் எதிர்பாராத விதமாக அதில் உள்ள த்ரஸ்டர் செயலிழப்பு மற்றும் ஹீலியம் கசிவுகள் ஏற்பட்டன.

இதனால், புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இருவரும் திட்டமிட்டபடி பூமிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் ஸ்பேஸ்ஷிப் மூலம் அவர்களை பூமிக்கு அழைத்துவருவது தான் பாதுகாப்பானது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அவர்கள் பிப்ரவரி 2025 வரை விண்வெளியில் காத்திருக்க வேண்டி இருப்பதாக நாசா குறிப்பிட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!