கடகுல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம்

கால்வாய் ஒன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நபரின் சடலம் தலத்துஓயா, கடகுல பகுதியில் நேற்று (15) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் வயது சுமார் 27 வயதுடையவர் என தலத்துஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த 12 ஆம் திகதி மாலை வீட்டை விட்டுச் சென்ற நிலையில், வீடு திரும்பாத நிலையில் 13 ஆம் திகதி உயிரிழந்தவரின் தாயார் தலத்துஓயா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி தலத்துஓயா மாரஸ்சன வீதியில் உள்ள கால்வாய்க்கு அருகில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)