முதலையால் பிடிக்கப்பட்ட சிறுவனின் சடலம் களனி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
களனி ஆற்றில் நீராடச் சென்ற போது முதலை கடித்து உயிரிழந்த குழந்தையின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் பொலிஸ் கடல் பிரிவினர் மற்றும் கடற்படை நீர்மூழ்கி அதிகாரிகள் இணைந்து குழந்தையை தேடும் நடவடிக்கையின் போது குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலை தாக்கி குழந்தை பலியான இடத்திலிருந்து சுமார் 500 மீற்றர் ஆழத்தில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து விபத்து தொடர்பான பிரேத பரிசோதனை நாளை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடுவெல வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் வசிக்கும் 09 வயதுடைய பிரபோத் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவரான பிரபோத், கடுவெல வெலிவிட்ட புனித மரியாள் கல்லூரியில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றார்.
இவர் நேற்று தனது பாட்டி மற்றும் ஒரு சகோதரனுடன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள களனி கங்கைக்கு நீராட வந்துள்ளார்.
பாட்டி துணி துவைத்துக் கொண்டிருந்த போது, தனது தம்பியுடன் அருகில் நீந்திக் கொண்டிருந்த போது, திடீரென முதலை ஒன்று வந்து பிரபோத்வை பிடித்துள்ளது.