டெல்லியில் 10 நாட்களுக்கு முன் காணாமல் போன 3 வயது குழந்தை சடலமாக மீட்பு
தென்கிழக்கு டெல்லியில்(Delhi) தனது வீட்டிலிருந்து காணாமல் போன மூன்று வயது குழந்தையின் உடல் ஜெய்த்பூர்(Jaitpur) பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள வடிகாலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஜனவரி 13ம் திகதி ஆட்டோ ஓட்டுநரான குழந்தையின் தந்தை, ராஜு(Raju) தனது மகன் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.
பின்னர் குழந்தையை கண்டுபிடிக்க 16 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று உடல் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடரும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





