இறுதி சடங்கின்போது அசைந்த உடல் : அதிர்ச்சியில் ஸ்பெயின் மருத்துவர்கள்!
ஸ்பெயினில் இறுதி சடங்கொன்றின்போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபரின் உடல் அசைந்தமையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஜுவான் மார்ச் டி புன்யோலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் மஜோர்கன் தலைநகர் பால்மாவில் உள்ள சோன் வாலண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இறுதி சடங்கின்போது அவரது உடல் அசைந்த நிலையில் துணை மருத்துவர்கள் அவர் உயிருடன் இருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஸ்பெயின் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)