இலங்கையில் எரிந்த வண்டியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

அண்மையில் பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பத்துஓயா பகுதியில் இடம்பெற்ற தீயினால் எரிந்து நாசமான டபுள் கெப் வண்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட சடலம் கம்பஹா தெகட்டானை பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் படி வாகனம் எரியக்கூடிய பொருட்களை பயன்படுத்தி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்திற்கு அருகாமையில் காணப்பட்ட ஒரு பையில் என்ஐசி மற்றும் கம்பஹாவில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான பல்வேறு ஆவணங்கள் இருந்ததாகவும், எரிந்த வாகனத்திற்குள் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட பையில் இறந்தவரின் சில ஆடைகள், தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை இருந்தன.
இச்சம்பவம் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சூழப்பட்டுள்ளது என தெரிவித்த பொலிஸார், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம், நீதி வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச நீதவான் ஆகியோரின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.