நேபாளத்தில் காணாமல் போன இரு இந்தியர்களின் சடலங்கள் மீட்பு
நேபாளத்தில்(Nepal) மலையேற்றப் பயணத்தின் போது அக்டோபர் 20 முதல் காணாமல் போன இரண்டு இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் மனாங்(Manang) மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பல வாரங்களாக தேடுதலுக்குப் பிறகு இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 52 வயதான ஜிக்னேஷ் குமார் லல்லுபாய் படேல்(Jignesh Kumar Lallubhai Patel) மற்றும் அவரது 17 வயது மகள் பிரியான்சா குமாரி படேல்(Priyansa Kumari Patel) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக இருவரும் பனியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
MA, BEd பட்டம் பெற்ற படேல், பல ஆண்டுகளாக ஆசிரியராகவும் கல்விப் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 11ம் வகுப்பு மாணவி பிரியான்சா 2018 முதல் தனது தந்தையுடன் சேர்ந்து ஏராளமான மலையேற்றங்களில் பல சாகசச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.





