பாகிஸ்தானில் மூன்று திருநங்கைகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு

பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில், சாலையோரத்தில் மூன்று திருநங்கைகளின் உடல்களைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கராச்சியின் மேமன் கோத் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
“குண்டு துளைத்த மூன்று திருநங்கைகளின் உடல்கள் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டன,” என்று நகர காவல்துறை அதிகாரி ஜாவேத் அகமது அப்ரோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் ஹிஜ்ராக்கள் என்றும் அழைக்கப்படும் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)