மொரோக்கோவின் எல்லைக்கு அருகே புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு!
மொரோக்கோவின் (Morocco) அல்ஜீரியா (Algeria) எல்லைக்கு அருகே 09 ஆப்பிரிக்க புலம் பெயர்ந்தோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உறைபனியின் தாக்கத்தால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குளிர்காலத்தில் ஏற்படும் கடுமையான வெப்பநிலைக்கு பெயர் பெற்ற மொராக்கோவின் தொலைதூர மலைப்பாங்கான பகுதியான ராஸ் அஸ்ஃபோரில் (Ras Asfour) 07 ஆண்கள் மற்றும் 02 பெண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இறந்த நபர்கள் பற்றிய கேள்விகளுக்கு மொரோக்கோவின் உள்துறை அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், சிறந்த வாழ்க்கை நிலைமைகளைத் தேடும் ஆயிரக்கணக்கான குடியேறிகள் மொரோக்கோவிலிருந்து ஸ்பெயின் உட்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர்கின்றனர்.
வட ஆபிரிக்க நாட்டின் பாதுகாப்புப் படைகள் இதுபோன்ற முயற்சிகளைத் தடுப்பதாக தொடர்ந்து தெரிவிக்கின்றன.
இருப்பினும் சட்டவிரோத எல்லை கடப்புக்களும், உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





