கிரேக்க தீவில் 4 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் மீட்பு
கிரீஸ் அதிகாரிகள் கிழக்கு ஏஜியன் தீவான ரோட்ஸ் கடற்கரையில் கடலில் இருந்து நான்கு பேரின் உடல்களை மீட்டுள்ளனர், மேலும் 25 பேர் கடற்கரையில் உயிருடன் காணப்பட்டதாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கடலோர காவல்படையின் கூற்றுப்படி,ரோட்ஸின் தெற்கு முனைக்கு அருகில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் மீட்கப்பட்டன.
தப்பிய 25 பேர் கொண்ட குழு நீந்தி கரைக்கு சென்ற பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். பொலிசார் முதலில் 11 பேர் கொண்ட ஆரம்பக் குழுவை கண்டுபிடித்தனர், மீதமுள்ளவர்கள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
தப்பியவர்கள் அதிகாரிகளிடம், தாங்கள் அருகிலுள்ள துருக்கிய கடற்கரையிலிருந்து வேகப் படகு மூலம் கிரேக்க தீவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கப்பலை ஓட்டிச் சென்ற கடத்தல்காரர் தங்களைத் தண்ணீருக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.
மேலும் யாரும் காணவில்லை என்று தப்பிப்பிழைத்தவர்களிடமிருந்து அதிகாரிகள் உறுதிசெய்தவுடன்.அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டது.