மாயமான 02 கொலம்பிய இசைக்கலைஞர்களின் உடல்கள் கண்டெடுப்பு!
கடந்த வாரம் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு கொலம்பிய இசைக்கலைஞர்களின் உடல்கள் மெக்சிகோ நகரத்திற்கு வெளியே கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பி-கிங் என்று அழைக்கப்படும் பாடகர் பேய்ரான் சான்செஸ் சலாசர் மற்றும் டிஜே ரெஜியோ க்ளோன் என்று அழைக்கப்படும் ஜார்ஜ் லூயிஸ் ஹெர்ரெரா ஆகியோரின் உடல்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு நண்பர்களும் செப்டம்பர் 16 அன்று மெக்சிகோ நகரத்தின் உயர்நிலை போலான்கோ பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றிருந்த நிலையில் மாயமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் போதைப்பொருள் கடத்தல் குழுவினரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)





