இலங்கை : மீன்பிடி துறைமுகத்தில் பற்றி எரிந்த படகுகள்!

இலங்கை – குடுவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இன்று (21) காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.
பல நாள் மீன்பிடி கப்பலான “துஷானி”யில் தீ பரவியதாகவும், தீயினால் படகு முற்றாக எரிந்து நாசமானதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீயினால் கப்பலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பல நாள் மீன்பிடிக் கப்பலும் சிறிய கப்பலும் சேதமடைந்துள்ளன.
எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 58 times, 1 visits today)