ஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற படகு மூழ்கி விபத்து : 12 பேர் பலி!
மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்றபோது, டிஜெர்பாவில் துனிசியக் கடற்கரையில் படகொன்று மூழ்கி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மூன்று கைக்குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 10 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கிய படகில் இருந்த 29 பேரை கடலோர காவல்படையினர் மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.





