அயர்லாந்தில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக எரியூட்டப்பட்ட படகு!
அயர்லாந்தில் சட்டவிரோதமாக படகு மூலம் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி சர்ச்சைக்குரிய வகையில் நூதன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஸ
இதன்போது புலம்பெயர்ந்தோர் படகின் உருவ பொம்மையுடன் கூடிய மூவர்ண கொடி ஏற்றப்பட்டிருந்த உருவப்படும் எரியூட்டப்பட்டுள்ளது.
படகுகளை நிறுத்து” என்ற ஒரு பலகை உட்பட குடியேற்ற எதிர்ப்பு பதாகைகளும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது வடக்கு அயர்லாந்தின் காவல் சேவை (PSNI) “பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அல்லது பாதிக்கப்படுபவர்களுக்கு உதவவும், மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்” விரும்புவதாக கூறியுள்ளது.
இதனால் பொலிஸார் தற்பொது இது தொடர்பான மேலதிக விசாரணைகைள முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





