துருக்கி கடற்கரையில் படகு விபத்து – 21 புலம்பெயர்ந்தோர் பலி
துருக்கிய கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் ஐந்து குழந்தைகள் உட்பட 21 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி இறந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெரியவில்லை. துருக்கிய கடலோர காவல்படையினரால் இரண்டு பேர் மீட்கப்பட்டதாகவும், மேலும் இருவர் தாங்களாகவே தண்ணீரில் இருந்து வெளியேற முடிந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடமேற்கு மாகாணமான கனக்காலேயின் கரையோரத்தில் ஏஜியன் கடலில் அமைந்துள்ள Gokceada அல்லது Imbros என்ற துருக்கியின் மிகப்பெரிய தீவில் படகு கவிழ்ந்தது.
“பாதுகாப்பு குழுக்கள் ஐந்து குழந்தைகள் உட்பட 21 பேரின் உடல்களை கண்டுபிடித்தனர்” என்று உள்ளூர் கவர்னர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு ஒரு விமானம், இரண்டு ஹெலிகாப்டர்கள், ஒரு ஆளில்லா விமானம், 18 படகுகள் மற்றும் 502 பணியாளர்கள் ஆதரவு அளித்தனர்.