செய்தி

பக்தர்களுடன் கடலில் மூழ்கியது படகு: இருபர் பலி: யாழில் பெரும் சோகம்!

யாழ்.கடற்பரப்பில் படகொன்று இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஐவர் மீட்கப்பட்டு யாழ்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பிரதேச மக்கள், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

யாழ். குருநகர் இறங்குத்துறையில் இருந்து கிளிநொச்சி பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க பக்தர்களை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

படகில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலர் பயணித்துள்ளனர் என தெரியவருகின்றது.

இதுவரை மூன்று பேர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஏனைய பக்தர்களைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமானது. இன்று (06) நற்கருணை பெருவிழா இடம்பெறுகின்றது. நாளை (07) சனிக்கிழமை தேர்த் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!