விபத்துக்குள்ளான படகு : இந்தோனேசியாவில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள்!

படகு மூழ்கிய நிலையில், 110க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் கரையேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் மற்றும் உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதி முகாம்களில் இருந்து தப்பித்து இந்தோனேசியா, மலேசிய போன்ற நாடுகளில் தஞ்சமடைவது வழமையாகும்.
ஆச்சே மற்றும் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த மாதம் சுமார் 400 ரோஹிங்கியாக்கள் படகு மூலம் வந்தனர். கடந்த ஆண்டில் 2000 மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
UNHCR அதிகாரியான பைசல் ரஹ்மான் கூறுகையில், கிழக்கு ஆச்சேயின் பிரேம் பேயூன் மாவட்டத்தில் மொத்தம் 116 அகதிகள் கரைக்கு வந்துள்ளனர் என அறிவித்துள்ளார்.
(Visited 31 times, 3 visits today)