பிரான்ஸில் தீவிரமடையும் நீல நாக்கு வைரஸ் – தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை
பிரான்ஸில் நீல நாக்கு எனப்படும் ஒருவகை வைரஸ் பரவி வரும் நிலையில் அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.
ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளிடம் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதனால் கால்நடைகளின் நாக்கு நீலம் அல்லது நாவல் நிறத்தில் மாறுவதுடன் உயிரிழப்பும் ஏற்படுகின்றது.
இதனால் பண்ணையாளர்கள் மிகவும் மனச்சோர்வடைந்துள்ளனர்.
இந்நிலையில், இதனை எதிர்கொள்ள தேவையான தடுப்பூசிகளை பிரான்ஸ் கொள்வனவு செய்யவுள்ளது.
முன்னதாக 12 மில்லியன் தடுப்பூசிகளுக்கான கொள்வனவை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தற்போது மேலதிகமாக 2 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க உள்ளது.
‘இந்த வேகமாக நோய்பரவலைக் கட்டுப்படுத்த – தடுப்பூசி போடும் பணியை விரைவாக மேற்கொண்டுள்ளோம்.
மொத்தமாக 14 மில்லியன் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட உள்ளன என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்தார்.