வானில் தோன்றம் நீல நிலவு : பிரித்தானியர்களுக்கு காணக் கிடைக்கும் அரிய காட்சி!
பிரித்தானியா முழுவதும் வானத்தை ஒளிரச் செய்யும் ஒரு அரிய நிகழ்வை மக்கள் பார்வையிட முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நட்சத்திரப் பார்வையாளர்கள் இன்றிரவு திகைப்பூட்டும் நீல நிற சூப்பர்மூனை பார்வையிட முடியும்.
இன்று வானில் தோன்றும் சந்திரன் வழக்கத்தை விட பெரியதாகவும், நீல நிறத்திலும் காணப்படுவது விசேட அம்சமாகும்.
சூப்பர் மூன்கள் பொதுவாக வருடத்திற்கு மூன்று முதல் நான்கு முறை நிகழும் மற்றும் ஒரு முழு நிலவு பூமியின் சுற்றுப்பாதையில் அதன் மிக அருகில் இருக்கும் போது நிகழும் நிகழ்வாகும்.
இந்த நிகழ்வு ஸ்டர்ஜன் சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இம்முறை தோன்றும் நிலவானது மிகப் பெரியதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)