சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட ப்ளூ கோஸ்ட் விண்கலம்!
உலகின் இரண்டாவது தனியார் நிதியுதவி விண்கலமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் ப்ளூ கோஸ்ட் சந்திரனில் தரையிறங்கியுள்ளது.
நாசா நிதியுதவியுடன், ப்ளூ கோஸ்ட் லேண்டர் ஜனவரி மாதம் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் இருந்து ஏவப்பட்டது.
குறித்த விண்கலமானது பூமியை சுற்றிவந்த நிலையில் சந்திரனின் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
விண்கலம் தரவுகளைச் சேகரித்து சூரியனின் கதிர்களில் இருந்து அதன் சூரிய பேனல்களில் ஆற்றலை உருவாக்கத் தொடங்கும்.
பெரும்பாலான சந்திர தரையிறங்கும் பணிகள் சூரிய ஒளி மறைந்த 14 நாட்களுக்குப் பிறகு முடிவடையும் அதே வேளையில், அதன் சூரிய தொழில்நுட்பம் காரணமாக ப்ளூ கோஸ்ட் நீண்ட காலம் நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.





