வியர்வை மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கணக்கிடலாம் – சிங்கப்பூர் ஆயலாளர்களின் முயற்சி

வியர்வை மூலம் ரத்தச் சர்க்கரை அளவைக் கணக்கிடும் plaster கண்டுபிடிக்கப்ப்டுள்ளது.
சிங்கப்பூர் – நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் இதனை உருவாக்கியுள்ளனர்.
அன்றாடம் ரத்தச் சர்க்கரை அளவை எவ்விதச் சிகிச்சையும் இன்றி அதன்மூலம் கண்காணிக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
glucose அடங்கிய வியர்வை-வழி ரத்தச் சர்க்கரை அளவை இந்த plaster கண்டுபிடித்துவிடும்.
அத்துடன், சிறுநீரக, கல்லீரல் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் அது உதவும். நோயாளிகள் இரண்டு நிமிடங்களுக்கு அந்த plasterஐ தோலில் ஒட்டிக்கொள்ளவேண்டும்.
பிறகு அதனை உரித்தெடுத்து UV விளக்கின் அடியில் வைக்கவேண்டும். அதன்மூலம் பதிவாகும் ரத்தச் சர்க்கரை அளவைச் செயலி மூலம் நோயாளிகள் தெரிந்துகொள்ளலாம்.
(Visited 24 times, 1 visits today)