இலங்கை

இலங்கை முழுவதும் உள்ள இரத்த வங்கிகளில் குருதி தட்டுப்பாடு!

இலங்கை முழுவதும் உள்ள  இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும் வருகின்ற ஒரு சில வாரங்களில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் இரத்தங்கள் முடிவடையவுள்ளமையினால் அவசரமாக குருதியினை வழங்குமாறு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கி சேவை ஓரளவிற்கு திருப்திகரமாக காணப்படுகின்றது. எனினும் சில குருதிவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன்படி எதிர்மறை இரத்தவகைகளுக்கு கூடுதல் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனை நிவர்த்தி செய்வதற்கு பொது மக்கள் முன்வரவேண்டும் எனினும் மக்களிடையே இரத்ததானம் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டினார்.

மேலும் இரத்ததானம் தொடர்பான விளக்கத்தினை பொதுமக்களுக்கு ஊடகங்களே வழங்க முன்வரவேண்டும் என்றும் மேலதிக தகவல்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியூடாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.மேலும் 18 – 60 வயதுக்குட்பட்ட 50 கிலோ நிறையுடைய ஆரோக்கிமான நிலையிலுள்ள சுகதேகி ஒருவரால் இரத்ததானம் செய்து கொள்ள முடியும் என்பதை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கி வைத்திருந்தனர். இரத்த தானம் செய்வோம்! மனித உயிர் காப்போம்! அனைவரும் ஒத்துளைப்பு வழங்குங்கள்

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்