திருகோணமலையில் ஐ.எப் தமிழ் ஊடக அனுசரணையில் இரத்ததான முகாம்
BY MP
July 13, 2023
0
Comments
295 Views
திருகோணமலை- தெவனிபியவர மகா வித்தியாலயத்தில் ஐ. எப் தமிழ் ஊடக வலையமைப்பினால் இன்று (13) இரத்ததான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குருதி பற்றாக்குறைக்கு உதவும் முகமாக பாடசாலை நிர்வாகம், பெற்றோர்களுடன் இணைந்து இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன் போது கோமரங்கடவல வலயக் கல்வி பணிப்பாளர் கே.சீ.பியலத், தெவனிபியவர மஹா வித்தியாலயத்தின் அதிபர் சரத் ஜயசேகர மற்றும் ஆசிரியை இரத்ததான முகாம் பற்றி தமது கருத்துக்களையும் வெளியிட்டனர்.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட கொடையாளிகள் இரத்த தானம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.