#BlockElonMusk : மஸ்குக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள பயனர்கள்!
x தளத்தில் தவறான கருத்துக்கள் பரப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மஸ்க் 50 தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் X இல் மஸ்க்கின் சமீபத்திய செயல்பாடு கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் பிரித்தானியாவில் தவறான தகவலால் தூண்டப்பட்ட கலவரங்களை தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கத்தின் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
வன்முறைக்கு வழிவகுக்கும் உள்ளடக்கத்திற்கு சமூக ஊடக தளங்கள் பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் குரல் கொடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், மஸ்க் இந்த கவலைகளை நிராகரித்தார். ஆகஸ்ட் 3 அன்று கலவரத்தை தொடர்ந்து “உள்நாட்டுப் போர் தவிர்க்க முடியாதது” என்று ட்வீட் செய்ததுடன், இங்கிலாந்தின் குடியேற்றக் கொள்கைகளை விமர்சித்தார்.
இந்நிலையில் #BlockElonMusk என்ற ஹேஷ்டேக் வார இறுதியில் X இல் பிரபலமடையத் தொடங்கியது. யனர்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர் மற்றும் மஸ்க்கைத் தடுப்பதற்கான ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.