தென்கொரியாவிற்கு பயணித்த பிளிங்கன் : வடகொரியாவின் அதிரடி நடவடிக்கை!
தென் கொரியாவில் அரசியல் கொந்தளிப்பின் போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சியோலுக்கு விஜயம் செய்ததை ஒட்டி, ஒரு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.
தென் கொரியாவின் செயல் தலைவர் சோய் சாங்-மோக்கை பிளின்கன் சந்தித்த சிறிது நேரத்திலேயே இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தச் சந்திப்பில், தென் கொரியாவிற்கான வாஷிங்டனின் “அசையாத” பாதுகாப்பு உறுதிப்பாட்டை பிளிங்கன் வலியுறுத்தினார்.
மற்றும் உத்தியோகபூர்வ வாசிப்பின்படி, சாத்தியமான வட கொரியா ஆத்திரமூட்டல்களுக்கு தயாராக ஒரு வலுவான கூட்டு பாதுகாப்பு நிலைப்பாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.
(Visited 3 times, 1 visits today)