தெஹ்ரானில் அணிவகுப்பு நேரத்தில் வெடிப்பு சத்தம் -வைரலாகும் காணொளிகள்
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மத்திய பகுதியில் பெரும் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஆண்டுதோறும் நடைபெறும் Quds Day பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்த நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்து சில குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, வெடிப்புகளுக்குப் பின்னர் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.





