செய்தி

ரஷ்யாவின் மாஸ்கோ அருகே குண்டுவெடிப்பு: 25 பேர் காயம்

மாஸ்கோவின் வடகிழக்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யாவின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செர்ஜிவ் போசாட் நகரில் உள்ள ஜாகோர்ஸ்க் ஆப்டிகல் மெக்கானிக்கல் ஆலையின் கொதிகலன் அறை பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த ஆலை ரஷ்ய இராணுவம், அரசு நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான ஆப்டிகல் கருவிகளை உற்பத்தி செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்த வெடிப்புக்கும் ட்ரோன்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இது உக்ரைனின் தாக்குதல் அல்ல என்றும் ரஷ்யா உறுதி செய்துள்ளது.

வெடித்ததில் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள வீடுகளின் ஜன்னல்கள் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி