ரஜினிக்கு பதிலாக விஜய்யை பாஜக களமிறக்கியுள்ளது: சபாநாயகர் அப்பாவு

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரோடு நானும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.
ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள், அவர் வரவில்லை.
அவருக்கு பதிலாக விஜயை ஏற்பாடு செய்து இருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
நடிகர் விஜய் பாஜகவின் பி டீம். எத்தனை விமர்சனங்கள் செய்தாலும் அதை தாங்க கூடிய அரசாகவும் மக்கள் நலனுக்காகவும் இந்த அரசு தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
(Visited 15 times, 1 visits today)