இந்தியா

கேரளாவிவிருந்து முதல்முறையாக மக்களவைக்குள் நுழையும் பாஜக : திருச்சூர் தொகுதியில் சுரேஷ்கோபி வெற்றி!

கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ள நிலையில், திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கும் சசி தரூருக்கும் இடையே கடும் இழுபறி நிலவுகிறது.

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அங்கு முன்னிலை வகித்து வருகிறது. 17 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலத்தூர் தொகுதியில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்து திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி முன்னிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 273 வாக்குகளை பெற்ற அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில் குமாரை விட 73 ஆயிரம் வாக்குகளும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முரளிதரனை விட 81 ஆயிரம் வாக்குகளும் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல் திருவனந்தபுரம் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் சசி தரூருக்கும், பாஜகவின் மத்திய அமைச்சராக உள்ள ராஜீவ் சந்திரசேகருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. சசி தரூர் 3,900 வாக்குகள் முன்னிலையில் இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே கடும் இழுபறி நிலவுகிறது. திருச்சூர் தொகுதி வெற்றியின் மூலம் கேரள மாநிலத்தில் இருந்து முதல்முறையாக மக்களவைக்குள் பாஜக நுழைகிறது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!