அமெரிக்காவில் பறவை மோதியதால் ஏற்பட்ட விபரீதம் : பற்றி எரிந்த விமானம்!

ஃபெடெக்ஸ் சரக்கு விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த விமானத்தின் விமானிகள், விமானத்தை மீண்டும் அதே விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் விமானத்தில் மூன்று பேர் இருந்தனர், ஆனால் அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமானம் புறப்படும் போது அதன் இயந்திரங்களில் ஒன்றில் பறவை மோதியதால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)