கோடி கணக்கில் சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ. பட்டியல்!
கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ₹1,413 கோடி சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ.ஆக இருக்கின்றார்.
ஜனநாயக சீர்திருத்த சங்கம், 28 மாநில சட்டசபைகள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 4001 எம்.எல்.ஏக்களை ஆய்வு செய்து இந்திய எம்.எல்.ஏக்களின் சொத்து குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகாவில் கவுரிபிதனூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெறற புட்டசுவாமி கவுடா ரூ.1,267 கோடி சொத்துகளுடன் 2வது இடத்திலும்.காங்கிரஸ் கோவிந்தராஜ் நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ., ஆக உள்ள பிரியா கிருஷ்ணா ரூ.1,156 கோடி சொத்துகளுடன் 3வது இடத்திலும் உள்ளார்.
இந்தியாவில் அதிக சொத்துக்கள் உள்ள எம்எல்ஏக்களின் பட்டியல்
1) டி.கே. சிவக்குமார் (INC): கனகபுரா, கர்நாடகா 2023; மொத்த சொத்து மதிப்பு ₹1,413 கோடி.
2) KH புட்டஸ்வாமி கவுடா (IND): கௌரிபிதனூர், கர்நாடகா 2023; மொத்த சொத்து மதிப்பு ₹1,267 கோடி.
3) பிரியகிருஷ்ணா (INC): கோவிந்தராஜநகர், கர்நாடகா 2023; மொத்த சொத்து மதிப்பு ₹1,156 கோடி.
4) என் சந்திரபாபு நாயுடு (TDP): குப்பம், ஆந்திரப் பிரதேசம் 2019; மொத்த சொத்து மதிப்பு ₹668 கோடி.
5) ஜெயந்திபாய் சோமாபாய் படேல் (BJP): மான்சா, குஜராத் 2022; மொத்த சொத்து மதிப்பு ₹661 கோடி.
6) சுரேஷ் பிஎஸ் (INC): ஹெப்பல், கர்நாடகா 2023; மொத்த சொத்து மதிப்பு ₹648 கோடி.
7) ஜெகன் மோகன் ரெட்டி (YSRCP): புலிவெந்த்லா, ஆந்திரப் பிரதேசம் 2019; மொத்த சொத்து மதிப்பு ₹510 கோடி.
8) பராக் ஷா (பாஜக): காட்கோபர் கிழக்கு, மகாராஷ்டிரா 2019; மொத்த சொத்து மதிப்பு ₹500 கோடி
9) டி.எஸ். பாபா (INC): அம்பிகாபூர், சத்தீஸ்கர் 2018, மொத்த சொத்து மதிப்பு ₹500 கோடி
10) மங்கள்பிரபாத் லோதா (BJP): மலபார் ஹில், மகாராஷ்டிரா 2019; மொத்த சொத்து மதிப்பு ₹441 கோடி.
இந்தியாவில் மிகக்குறைந்த சொத்துக்கள் கொண்ட எம்எல்ஏக்களின் பட்டியல்
1) நிர்மல் குமார் தாரா (BJP): சிந்து (SC), மேற்கு வங்கம் 2021; மொத்த சொத்து மதிப்பு ₹1,700.
2) மகரந்த முதுலி (IND): ராயகடா, ஒடிசா 2019; மொத்த சொத்து மதிப்பு ₹15,000.
3) நரிந்தர் பால் சிங் சவ்னா (ஏஏபி): ஃபசில்கா, பஞ்சாப் 2022; மொத்த சொத்து மதிப்பு ₹18,370.
4) நரிந்தர் கவுர் பராஜ் (ஏஏபி): சங்ரூர், பஞ்சாப் 2022; மொத்த சொத்து மதிப்பு ₹24,409.
5) மங்கள் கலிந்தி (JMM): ஜுக்சலை (SC), ஜார்கண்ட் 2019; மொத்த சொத்து மதிப்பு ₹30,000.
6) புண்டரிகாக்ஷ்ய சாஹா (AITC): நபத்விப், மேற்கு வங்காளம் 2021; மொத்த சொத்து மதிப்பு ₹30,423.
7) ராம் குமார் யாதவ் (INC): சந்திராபூர், சத்தீஸ்கர் 2018; மொத்த சொத்து மதிப்பு ₹30,464.
8) அனில் குமார் அனில் பிரதான் (SP): சித்ரகூட், உத்தரப் பிரதேசம் 2022; மொத்த சொத்து மதிப்பு ₹30,496.
9) ராம் டாங்கோர் (பாஜக): பந்தனா (எஸ்டி), மத்தியப் பிரதேசம் 2018; மொத்த சொத்து மதிப்பு ₹50,749.
10) வினோத் பிவா நிகோல் (சிபிஐ(எம்)): தஹானு (எஸ்டி), மகாராஷ்டிரா 2019; மொத்த சொத்து மதிப்பு ₹51,082.
மறுபுறம், இந்தியாவில் உள்ள 44% எம்எல்ஏக்கள் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் ஏடிஆர் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பகுப்பாய்வு செய்யப்பட்ட 4,001 எம்எல்ஏக்களில் 1,777 சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகரில் மொத்தமுள்ள 70 பேரில் (சுமார் 53%) 37 எம்எல்ஏக்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.