முடிவுக்கு வரும் எம்.பி.க்களின் ஓய்வூதியச் சலுகை ; புதிய சட்டமூலம் தயார்
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை முழுமையாக இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் நேரடிப் பணிப்புரைக்கு அமைய இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை நீக்குவதற்காக, ‘பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம்’ தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மக்கள் மத்தியில் விவாதத்திற்குள்ளாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியச் சலுகை, இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக இனிவரும் காலங்களில் இல்லதொழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





