வட அமெரிக்கா

அமெரிக்காவில் மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதா – எதிற்கும் ஒபாமா!

அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த ‘பிக் பியூட்டிபுல்’ வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரி குறைப்பு நடவடிக்கைக்கு பின்பு, நிதி ஆதாரத்தை திரட்ட, Medicaid எனப்படும் மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த மசோதாவை விமர்சித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “மருத்துவ உதவிக்கான நிதியைக் குறைத்து, மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் விரைந்து வருவதால், 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்

இந்த மசோதாவை அவை நிறைவேறினால், உழைக்கும் வர்க்க குடும்பங்களின் எதிர்கால தலைமுறைகள் கடுமையாக பாதிக்கும். இன்றே உங்கள் பிரதிநிதியை அழைத்து, இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கச் சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!