சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய தயாராகும் பில் கேட்ஸ்

அடுத்த 20 ஆண்டுகளில் தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்யப்போவதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
தமது அறக்கட்டளையின் மூலம் அதனைச் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார். 2045ஆம் ஆண்டில் அறக்கட்டளையின் செயல்பாடுகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“என் இறப்பிற்குப் பிறகு பலர் என்னைப் பற்றி விமர்சிக்கக்கூடும். ஆனால் ஒரு போதும் நான் செல்வந்தராக இறந்தேன் என்று கூற வாய்ப்பு தரமாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
69 வயதாகும் பில் கேட்ஸ் இதுவரை சுமார் 100 பில்லியன் டொலரை சுகாதார, வளர்ச்சித் திட்டங்களுக்கு அளித்திருப்பதைச் சுட்டினார்.
அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 200 பில்லியன் டொலரை அந்தப் பணிகளுக்காக அவரது அறக்கட்டளை செலவிடும் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் 99 சதவீத சொத்துகளைத் தானம் செய்தாலும் உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தில் இருப்பார் என Bloomberg தெரிவித்துள்ளது.